மீண்டும் கைரேகை முறை: ரேசன் கடைகளில் செயல்பாட்டுக்கு வருகிறது!

 
handthumb

ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கைரேகை முறையை அமல்படுத்தபடாமல் இருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் கைரேகை முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

ரேஷன் கடைகளில் நாளை முதல் கைரேகை பதிவு நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ள தமிழக அரசு இதுவரை ரூபாய் 2000 மற்றும் மளிகை பொருட்கள் வாங்காதவர்கள் அதனை பெற வரும்போது அவர்களிடம் கைரேகை பெறப்படும் என்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக கைரேகை முறை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது நாளை முதல் மீண்டும் கைரேகை முறை அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது ரூபாய் 4000 மற்றும் மளிகை பொருட்கள் 99% வழங்கப்பட்டு விட்டதாகவும் இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் செய்து முடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக கைரேகை பதிவினை மீண்டும் செயல்முறைபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

handthumb

From around the web