தமிழகத்தில்  24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

 
toll gate

தமிழகத்திலுள்ள 24 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண உயர்வு என தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் 4 சுங்கச்சாவடிகள் நேற்று மூடப்பட்டதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதற்கு பதிலாக 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு உயர்த்தப்பட்ட அறிவிப்பால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இன்று நள்ளிரவு முதல் 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றும் அந்த சுங்கச்சாவடிகளில் பெயர்கள் பின்வருமாறு:

ஆத்தூர் (தாம்பரம்-திண்டிவனம்)
நல்லூர் (சென்னை - தடா)
பரனூர் (தாம்பரம்- திண்டிவனம்)
சூரப்பட்டு (சென்னை பைபாஸ்)
வானகரம் (சென்னை பைபாஸ்)
வாணியம்பாடி (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)
கிருஷ்ணகிரி (ஓசூர்-கிருஷ்ணகிரி)
லம்பலக்குடி (திருச்சி-காரைக்குடி)
லட்சுமணப்பட்டி (திருச்சி-காரைக்குடி)
போகலூர் (மதுரை-ராமநாதபுரம்)
நாங்குநேரி (நெல்லை-அஞ்சுகிராமம்)
பூதக்குடி (திருச்சி பைபாஸ்-தோவரங்குறிச்சி-மதுரை)
பழையா (கந்தர்வகோட்டை, தஞ்சாவூர்-புதுக்கோட்டை)
பள்ளிகொண்டா (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)
சித்தம்பட்டி (திருச்சி பைபாஸ்,
தோவரங்குறிச்சி-மதுரை)
பட்டரைப்பெரும்புதூர் (திருப்பதி-திருத்தணி-சென்னை)
புதுக்கோட்டை (வாகைக்குளம்)
(திருநெல்வேலி-தூத்துக்குடி)
எஸ் வி புரம் (திருப்பதி-திருத்தணி-சென்னை)
சாலைப்புதூர் (மதுரை-திருநெல்வேலி-
பனகுடி-கன்னியாகுமரி)
செண்பகம்பேட்டை (திருமயம்-மானாமதுரை)
எட்டூர்வட்டம் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி)
திருப்பாச்சேத்தி (மதுரை-ராமநாதபுரம்)
கணியூர் (செங்கப்பள்ளி-கோவை பைபாஸ்)
கப்பலூர் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி)

From around the web