சரியும் தங்க விலை: இன்றைய விலை என்ன?

 
gold

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது என்பதையும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்ததையும் பார்த்து வந்தோம். இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது அடுத்து பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.4485 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 4475 என விற்பனையாகிறது. அதே போல் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 35880 என விற்பனையான நிலையில் இன்று சவரன் ஒன்றிற்கு ரூபாய் 80 குறைந்து 35800 என விற்பனையாகி வருகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூபாய் 4834 என்றும் 8 கிராம் ரூபாய் 38672 என்றும் விற்பனையாகி வருகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் 74.90 ரூபாய் என்றும் ஒரு கிலோ 74900 என்றும் விற்பனையாகிறது வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் சற்று கவலை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web