இதை செய்யாவிட்டால் 2021லும் கஷ்டம் தான்: பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை

 

2020 ஆம் ஆண்டு என்றாலே உலக சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மாண்டது மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உலக நாடுகளின் சுகாதார துறையில் வலியுறுத்தி வருகின்றன

mask

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதை அடுத்து பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நீங்கி உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் விஞ்ஞானியும் பொது சுகாதாரத் நிபுணருமான பிரதீப் கவுர் அவர்கள் ஒரு எச்சரிக்கையை தெரிவித்துள்ளார் 

அவர் தனது டுவிட்டரில் சென்னைவாசிகள் கொரோனாவை முற்றிலுமாக மறந்து விட்டதாகவே தெரிகிறது குறிப்பாக மால்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது 

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் இல்லையேல் 2020 ஆம் ஆண்டை போலவே 2021 ஆம் ஆண்டும் ஐசியுவில் தான் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே தயவுசெய்து மாஸ்க்குகள் அணிந்து 2021 ஆம் ஆண்டு அவரது குடும்பத்துடன் நல்ல ஆரோக்கியத்துடன் தொடங்குங்கள் என்று அவர் கூறியுள்ளார். பிரதீப் அவர்களின் இந்த எச்சரிக்கையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web