கொரோனா வார்-ரூமை தொடர்பு கொள்ள கூடுதல் தொலைபேசி எண்கள்!

 
war room

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகளுக்கு உதவும் வகையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிடும் வகையிலும் வார்-ரூம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வார்-ரூமை சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இருந்து வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஏற்கனவே நேற்று உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்உக்கு உதவிடும் கட்டுப்பாட்டு அறை சென்னை உள்பட 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

இந்த வார்-ரூமில் தற்போது கூடுதல் தொலைபேசி எண்களை வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. இந்த எண்களை தொடர்பு கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

war room

From around the web