மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி நீட்டிப்பு: மின்வாரியம் தகவல்


 

 
EB

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின் கட்டணம் செலுத்துவதற்கு மே 15 கடைசி தேதி என்று இருந்த நிலையில் சமீபத்தில் மே 30ஆம் தேதி வரை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதை அடுத்து மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் வழங்கிய இந்த அவகாசம் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

EB

மேலும் ஏப்ரல் மாதம் மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ள உயர் மின் அழுத்த மின் இணைப்பு உள்ளவர்கள் தாமத கட்டணத்துடன் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்பு தொகை செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

eb

From around the web