பி.எச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு: அம்பேத்கர் சட்டப்பல்கலை அறிவிப்பு

 
law

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்த அறிவிப்பு ஒன்றில் பி.எச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மே 31 ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதி வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சந்தோஷ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

தற்சமயம் தமிழகத்தில் நிலவி வரும் பெரும் பெருந்தொற்றினாலும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் நீட்டிப்பு செய்து உள்ளதாலும் 2021-2022 ஆம் ஆண்டில் கல்வி ஆண்டிற்கான பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 31 ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு தமிழ்நாடு பல்கலைக் கழக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் பி.எச்டி விண்ணப்பிக்கும் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

phd application

From around the web