காலையில் குறைந்த தங்கம் திடீரென மாலையில் உயர்ந்ததால் பரபரப்பு!

 
gold

தங்கம் விலை நேற்றை விட கிராம் ஒன்றுக்கு பத்து ரூபாய் இன்று காலை குறைந்ததாக தகவல் வெளியானதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கத்தை வாங்க நகைக்கடைகளில் குவிந்தனர். ஆனால் இன்று மாலை திடீரென தங்கத்தின் விலை நேற்று விலையைவிட 30 ரூபாய்  அதிகமாகியது நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சற்றுமுன்னர் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த விவரத்தை பார்ப்போம்,

சென்னையில் இன்று மாலை ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையை விட 30 ரூபாய் உயர்ந்து 4550.00 என்ற விலையிலும் ஒரு சவரன் தங்க விலை நேற்றைய விலையை விட 240 ரூபாய் குறைந்து 36400.00 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது

அதே போல் வெள்ளியின் விலை நேற்றைவிட கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்தது என்பதும் இன்று வெள்ளி ஒரு கிராம் 74.10 ரூபாய் என்ற விலையிலும் ஒரு கிலோ என்ற ரூ.74100 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தங்கம் விலை இந்த வாரம் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்றும் பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகள் தெரிவித்து இருந்த நிலையில் திடீரென சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததால் சென்னையிலும் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்த்தக்கது.

From around the web