அனைவரும் பாஸ் என்றாலும் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 
அனைவரும் பாஸ் என்றாலும் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்தது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் தேர்ச்சி என்ற வகையில் அனைவருக்கும் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்கள் மட்டும் பொதுத் தேர்வை எழுதலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது 

exam

பதினோராம் வகுப்பு சேருவதற்கு அதிக மதிப்பெண்கள் தேவை என்ற விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் மாநில அளவில் நடத்தப்படும் பொது தேர்வை எழுதலாம் என்றும் அதே நேரத்தில் இந்த தேர்வை அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து பல மாணவர்கள் பள்ளி கல்வி துறை நடத்தும் பொது தேர்வை எழுத முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

From around the web