ஓபிஎஸ்க்கு நன்றி சொன்ன ஈபிஎஸ், காலில் விழுந்து ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்!

 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு இன்று காலை முடிவு ஏற்பட்டது என்பதும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று அவருடைய வீட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஓபிஎஸ் வரவேற்றதாகவும், ஓபிஎஸ் வீட்டில் ஈபிஎஸ் விருந்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் ஓபிஎஸ் மகனும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத், ஈபிஎஸ் காலில் விழுந்து ஆசி பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. முதல்வர் ஈபிஎஸ் மட்டுமின்றி வழிகாட்டும் குழுவில் உள்ள 11 பேர்களும் ஓபிஎஸ் அவர்களிடம் ஆசி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த சந்திப்பை அடுத்து ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இருந்த கருத்துவேறுபாடு முற்றிலும் நீங்கி விட்டதாக கருதப்படுகிறது

From around the web