சுற்றுலா தளங்களுக்கு இ-பாஸ்: தமிழக அரசு அறிவிப்பு

 
epass

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் நேற்று சுமார் 2600 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் இபாஸ் மற்றும் கொரோனா சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே உள்ளே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இபாஸ் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதி கிடையாது என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

From around the web