3 நாளில் மின்சாரம்: அதிரடி அறிவிப்பு!

 
TNEB

புதிதாக மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மூன்று நாட்களுக்குள் இணைப்பு வழங்கிட வேண்டுமென மின்வாரிய ஊழியர்களுக்கு மின்சாரத் துறை இயக்குனர் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதிய வீடு கட்டும் போது மின்சார இணைப்பு பெற வேண்டுமென்றால் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் ஆகும் என்று சிலர் குறை சொல்லுவது உண்டு. இதனை அடுத்து தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி புதிய மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாறு விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் இணைப்பு கிடைக்கும் என்றும் மின்சார வாரிய இயக்குனர் தெரிவித்துள்ளார்

மின்வாரிய ஊழியர்கள் விண்ணப்பம் பெற்ற மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நுகர்வோரின் குறைகளைக் மூன்று நாட்களில் தீர்வு காண வேண்டும் என்றும் எந்த விண்ணப்பத்தையும் நிலுவையில் வைத்திருக்கக்கூடாது என்றும் நுகர்வோரின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கப்படுவதை மின்சார தலைமை பொறியாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் மின்சார வாரியத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். மின்சார வாரியத்தின் இயக்குநரின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web