இன்று முதல் அனைவருக்கும் மின்சார ரயில்: ஆனால் ஒரு நிபந்தனை!

 
train

இன்று முதல் சென்னை புறநகர் ரயிலில் அனைத்து பயணிகளும் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஆண்களுக்கு மட்டும் ஒருசில நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புறநகர் மின்சார ரயில் இயக்கப்படாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த ரயில் இயக்கப்பட்டும் முன் களப்பணியாளர்கள் மருத்துவர்கள் காவலர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே இயக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில் இன்று முதல் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே அனைத்து நேரங்களிலும் புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம் என்றும், ஆண்கள் கூட்டம் குறைவாக உள்ள நேரத்தில் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஆண்களுக்கு புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி இருக்காது என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யும் ஆண்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

From around the web