நாளை முதல் அனைத்து பயணிகளுக்கும் மின்சார ரயில்: அதிரடி அறிவிப்பு!

 
train

கடந்த சில நாட்களாக சென்னையில் புறநகர் மின்சார ரயில் இயங்கி கொண்டிருந்தாலும் அதில் அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உள்ள ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை அடுத்து அனைத்து பொது மக்களுக்கும் மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில வாரங்களாக எழுந்து வந்தது 

இந்த நிலையில் தற்போது சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் குறைந்து உள்ளதை அடுத்து தென்னக ரயில்வே தற்போது அனைத்து பயணிகளும் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. நாளை முதல் அனைத்து பயணிகளும் வழக்கம்போல் மின்சார ரயில் பயணம் செய்யலாம் என்றும் ரயில் பயணிகளுக்காக கூடுதல் மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டு உள்ளது. நாளை முதல் அனைத்து பயணிகளுக்கும் மின்சார ரயில் இயங்கும் என்று அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web