சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் எலக்ட்ரிக் ஆட்டோக்கள்: பரபரப்பு தகவல் 

 

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத சோலார் அல்லது எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்னையில் உள்ள நான்கு மெட்ரோ நிலையங்களில் இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்கள் இயக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது 

மேலும் இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்களை ஓட்டுவது பெண்களாகத்தான் இருப்பார்கள் என்றும் இந்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தையை தற்போது மெட்ரோ நிறுவன அதிகாரிகள் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன 

ஏற்கனவே கடந்த வாரத்தில் பெண்களால் இயக்கப்படும் எலக்ட்ரிக் மற்றும் சோலார் ஆட்டோக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அந்த ஆட்டோவில் ஜிபிஎஸ், சிசிடிவி, எச்சரிக்கை பட்டன் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன 

ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு ஆலந்தூர் ரயில் நிலையத்தில் மட்டும் இந்த எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த எலக்ட்ரிக் ஆட்டோ இயங்க திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web