தேர்தல் விடுமுறை: சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் எத்தனை பேர்?

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளதை அடுத்து கடந்த 1ம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

கடந்த வெள்ளி அன்று புனித வெள்ளி விடுமுறை என்பதும், அதனையடுத்து சனி ஞாயிறு விடுமுறை என்பதும் திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்து விட்டால் செவ்வாய்க்கிழமை தேர்தல் நாள் அன்று விடுமுறை என்பதால் நீண்ட இடைவெளி கிடைத்ததை அடுத்து சென்னையில் இருந்து பலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

buses

சென்னையிலிருந்து தேர்தலுக்கு ஓட்டுப் போட சொந்த ஊர் செல்பவர்களுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 957 என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று வரை 10 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த பேருந்துகள் முழுவதும் நிரம்பி பயணிகள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று உள்ளார்கள் என்றும் கூறியுள்ளது 

மேலும் ஆறாம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு பின்னர் ஏழாம் தேதி முதல் மீண்டும் சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு பல ஊர்களில் இருந்து இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

From around the web