கமல்ஹாசன் வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் தேர்தல் பிரசார வாகனத்தை திடீரென பறக்கும் படையினர் மடக்கி சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் அதிகாரிகளின் பறக்கும்படை தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கோடிக்கணக்கான பணமும் பொருள்களும் பிடிபட்டுள்ளன என்பதும் தேர்தல் வரை இந்த படையினர் வேலை பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

kamal

இந்த நிலையில் இன்று தஞ்சையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரைக்காக வாகனத்தில் சென்றார். அப்போது திடீரென தேர்தல் பறக்கும் படையினர் அவருடைய வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். சோதனைக்கு பின்னர் அவரது வாகனம் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டில் இருக்கும் அதிமுக திமுக ஆகிய கட்சிகளின் வாகனங்களை மறிக்காமல் பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறும் கமல்ஹாசனின் தேர்தல் வாகனத்தை பறக்கும் படையினர் மறித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web