5, 8ஆம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசின் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார். இதன்படி 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என்றும், மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
 
5, 8ஆம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசின் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.

இதன்படி 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என்றும், மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

வேறு பள்ளிகளில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்படும் என ஏற்கனவே கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் இருந்தது என்பதும், முந்தைய இயக்குனர் வெளியிட்ட அறிக்கையை திருத்தி புதிய அறிவிப்பை இயக்குனர் பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web