தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

 
education

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஜூன் 14ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் நிலையான வழிமுறைகளையும் அவர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி, உயர் கல்வி பயில்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணி, புதிதாக மாணவர்கள் சேர்க்கும் பணி ஆகியவை இருப்பதால் ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் உள்ள அலுவலக பணியாளர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது

மேலும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்த பணிகளையும் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கல்வி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்வையிடவும் செய்ய வேண்டும் என்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இதனால் தலைமை ஆசிரியர்கள் ஜூன் 14 முதல் தினமும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்றும் இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

From around the web