இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ள நிலையில் தமிழ்நாடு பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது என்றாலும் இறுதி ஆண்டு படிக்கும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும், முதுநிலை படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும், பொறியியல் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும் செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களின்
 

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ள நிலையில் தமிழ்நாடு பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மாணவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது என்றாலும் இறுதி ஆண்டு படிக்கும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும், முதுநிலை படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும், பொறியியல் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும் செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மாணவர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்கும், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மூன்றாம் ஆண்டு படிப்பிற்கும் செல்லலாம் என்றும், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வுகளை எழுத வேண்டும் என்றும், பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகள் படிப்பவர்கள் ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு எழுத தேவையில்லை என்றும், ஆனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கடைசி செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

From around the web