ஆன்லைன் கல்வி கடினம் எதிரொலி: மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை 

 

ஆன்லைன் மூலம் படிப்பது கடினமாக இருக்கிறது என்பதால் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி இன்று காலை வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ஆன்லைன் கல்வியால் இன்னொரு மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது

சென்னை மேடவாக்கத்தில் சேர்ந்த 14 வயது மாணவனான கார்த்திக் என்பவர் கடந்த சில நாட்களாக ஆன்லைன் கல்வியை படித்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைனில் கல்வி கற்க கடினமாக இருந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது

இதனை அடுத்து சற்று முன் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் கல்வி  கடினம் என்பதால் இன்று ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

ஏற்கனவே நீட்தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது ஆன்லைன் கல்விக்கும் மாணவர்களின் உயிர்கள் பலியாகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

From around the web