இரவு நேர ஊரடங்கு எதிரொலி: சென்னை புறநகர் ரயில்கள் நேரமாற்றம்

 
இரவு நேர ஊரடங்கு எதிரொலி: சென்னை புறநகர் ரயில்கள் நேரமாற்றம்

தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி முதல் பேருந்துகள் உள்பட எந்த வித போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் நேரம் மாற்றப்பட்ட நிலையில் தற்போது புறநகர் ரயிலில் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி கூறும்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை புறநகர் ரயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

train

மேலும் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web