சிபிஎஸ்இ ரத்து எதிரொலி: தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்தா?

 
exam

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து என பிரதமர் மோடி சற்றுமுன் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி ஆலோசனைக்கு பின் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு நாடுகளிலிருந்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர் 

இந்த நிலையில் சிபிஎஸ்சி தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை பொருத்தே தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்திருந்தார். இதன்படி நாளை தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் 12-ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்

இந்த ஆலோசனையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து அனைவரும் பரிந்துரை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழகத்திலும் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட =வே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

From around the web