சென்னையின் பல இடங்களில் நில அதிர்வு!

 
earthquake

சென்னையில் ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் சென்னை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது 

சென்னையில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் வங்ககடலில் 5.1 ரிக்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பகல் பன்னிரண்டு முப்பது மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறுகிறது. இதனால் தான் சென்னையின் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது தகவல்கள் வெளிவந்துள்ளது 

சென்னையில் உள்ள பெசன்ட் நகர்,ஆழ்வார் பேட்டை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இந்த நில அதிர்வு இருந்ததாகவும் லேசான நில அதிர்வு மட்டுமே இருந்ததால் மக்கள் பெரும் அச்சம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web