தமிழகத்தில் 14ஆம் தேதியும் விடுமுறையா? அரசியல் தலைவரின் டுவிட்டால் பரபரப்பு

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர் செல்பவர்கள் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் ஜனவரி 14ஆம் தேதி போகிப்பண்டிகை தினத்தன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ்ர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக
 
Pongal
தமிழகத்தில் 14ஆம் தேதியும் விடுமுறையா? அரசியல் தலைவரின் டுவிட்டால் பரபரப்பு

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர் செல்பவர்கள் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஜனவரி 14ஆம் தேதி போகிப்பண்டிகை தினத்தன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ்ர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்

பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்பது போகிப்பண்டிகையுடன் தொடங்குகிறது. எனவே போகியை கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாகவும் 14-ஆம் தேதியும் விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்!

From around the web