திமுகவில் இணைந்தனர் டாக்டர் மகேந்திரன், பத்மப்ரியா: அடுத்தது என்ன?

 
dmk

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரபலங்களாக இருந்த டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்மபிரியா ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் ம க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். இந்த கட்சியில் பல பிரபலங்கள் இணைந்தார்கள் என்பதால் இந்த கட்சி வலுவானதாக காணப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர் என்பதும் பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

padmapriya

இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்கள் திமுகவில் சேர்வார்கள் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் மகேந்திரன், பத்மபிரியா, அதிமுக முன்னாள் எம்பி விஜிலா ஆனந்த் உள்பட பலர் திமுகவில் இணைந்தனர்.

From around the web