கன்னியாகுமரி அருகே இரட்டைக்கொலை: இரண்டு வாலிபர்கள் கைது!

 
arrest

கஞ்சா வியாபாரிகளுக்கு இடையே நடந்த பிரச்சனை காரணமாக கன்னியாகுமரி அருகே இரட்டை கொலை நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கன்னியாகுமரியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் பாக்கீஸ்வரன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சம்பவம் நடந்த அன்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெனிஸ், செல்வின், ஜேசுராஜ் ஆகியோர் கஞ்சா வியாபாரிகள் கஞ்சா கேட்டதாகவும், ஆனால் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது

இதில் ஏற்பட்ட தகராறில் பாக்கீஸ்வரன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் ஜேசுராஜ் செல்வின் ஆகிய இருவரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். இந்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்து வந்ததில் பாக்கீஸ்வரன், முத்துக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடம் அவர்கள் வாக்குமூலம் வாங்கி இருப்பதாகவும் தெரிகிறது. கஞ்சா வியாபாரிகளிடையே நடந்த மோதல் காரணமாக கன்னியாகுமரி அருகே இரட்டை கொலை நடந்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web