உதயசூரியனுக்கு வாக்களித்தால் தாமரையில் ஓட்டு விழுகிறதா? தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்

 
உதயசூரியனுக்கு வாக்களித்தால் தாமரையில் ஓட்டு விழுகிறதா? தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 7 மணி முதல் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ஒரு சில தொகுதிகளில் உதயசூரியனுக்கு வாக்களித்தால் இரட்டை இலைக்கு வாக்கு செல்வதாகவும் உதயசூரியனுக்கு வாக்களித்தால் தாமரை சின்னத்தில் விளக்கு எரிவதாகவும் ஒரு சிலர் புகார் அளித்துள்ளதாக செய்தி வெளியானது.

இது குறித்து விளக்கமளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அவர்கள், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளித்தால் தாமரையில் ஓட்டு விழுவது குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் சின்னம் மாறி வாக்கு பதிவாகியதாக புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தாங்கள் விசாரித்தவரை இதுபோன்ற புகார்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

bjp

இதனையடுத்து சமூக வலைதளங்களில் மட்டுமே இது போன்ற செய்திகள் வெளியாகி வருவதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து உதயசூரியனுக்கு வாக்களித்தால் இரட்டை இலை சின்னத்திற்கும் தாமரை சின்னத்திற்கும் வாக்கு விழுவதாக கூறப்படுவது முழுக்க முழுக்க சமூக வலைதள பயனாளிகளின் வதந்தியே என்றும் தெரிகிறது 

தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பல முறை சோதனை செய்த பின்னரே வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டு உள்ளது என்பதும் இதில் முறைகேடு எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது

From around the web