அதிமுகவுக்கு ஆதரவா? ரஜினி வீட்டு வாசலில் உள்ள புகைப்படம் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாருக்கு ஆதரவு கொடுப்பார்? என்ற கேள்வி மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது
தனது 40 ஆண்டு கால நண்பர் கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பாரா? என்பது குறித்தும் அரசியல் வல்லுனர்கள் விவாதம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் திடீரென இன்று ரஜினியின் வீட்டு வாசலில் இரட்டை இலை மற்றும் தாமரையுடன் கூடிய கோலம் போடப்பட்டு உள்ளது. இந்த கோலத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வரும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணிக்குத்தான் ஆதரவு என்பதை ரஜினிகாந்த் தனது வீட்டின் முன் இட்ட கோலத்தின் மூலம் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்
பொதுவாக கோலம் என்றால் பூக்களும் இலைகளும் இருப்பது சாதாரண ஒன்றுதான். ஆனால் அதைக்கூட நெட்டிசன்கள் அரசியலாக்கி உள்ளது காமெடியின் உச்சகட்டமாக உள்ளது என்று நடுநிலை அரசியல் விமர்சகர்களும், ரஜினி ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் ரஜினி வீட்டு வாசலில் போட்ட கோலம் கூட சர்ச்சையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது