தடுப்பூசி சான்றிதழ்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம்!

 
vaccine

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெரும்பாலானோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது அலைக்கு முன்பாகவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மூன்றாவது அலையை மிக எளிதில் எதிர்கொள்ளலாம் என்று அனைத்து தரப்பினரும் கூறிவருகின்றனர் 

இந்த நிலையில் ஒரு சிலர் தடுப்பூசி போட்டவர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக தடுப்பூசி சான்றிதழை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். இவ்வாறு பதிவு செய்ய வேண்டாம் என ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் எச்சரித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
தடுப்பூசி சான்றிதழில் உள்ள தனிப்பட்ட விவரங்களை பிறர் எடுத்து தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் தடுப்பூசி சான்றிதழை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அடையார் டிசிபியின் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட சான்றிதழ்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்கவும். உங்களின் முழு பெயர், வயது, இருப்பிடம் மற்றும் அடையாள அட்டையின் சில தகவல்களை மோசடி நபர்களுக்கு நீங்களே கொடுப்பது போன்றது. 


 

From around the web