பள்ளிக்கு வர வேண்டாம்: மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

 
school

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் செப்டம்பர் 1-ஆம் தேதி தான் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது என்பதும் அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென வாந்தி பேதி காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் பள்ளிகள் திறந்ததால் இந்த பாதிப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் வகையில் வாந்தி பேதி உள்ளிட்ட அறிகுறி இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web