கணபதி யாகம் நடத்தியதா திமுக? போஸ்டர்களால் பரபரப்பு

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் கணபதி யாகம் நடத்தி பதவி ஏற்றுக்கொண்டதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திமுக ஒன்றிய தலைவர் யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த யாகத்தை ஆதரித்தும், எதிர்த்தும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அண்மையில் நடந்த கூட்டத்தில், தங்களுக்கு தெரிவிக்காமல் யாகம் நடத்தியது
 
கணபதி யாகம் நடத்தியதா திமுக? போஸ்டர்களால் பரபரப்பு

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் கணபதி யாகம் நடத்தி பதவி ஏற்றுக்கொண்டதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திமுக ஒன்றிய தலைவர் யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த யாகத்தை ஆதரித்தும், எதிர்த்தும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அண்மையில் நடந்த கூட்டத்தில், தங்களுக்கு தெரிவிக்காமல் யாகம் நடத்தியது ஏன் என அதிமுக கேள்வி எழுப்ப இதற்கு திமுக சரியான பதிலை கூறாததால் அதிமுக-திமுகவினரிடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் அலுவலக கண்ணாடி உடைந்ததாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுக யாகம் நடத்தியதை ஆதரித்து இந்து மக்கள் கட்சியும், எதிர்த்து அமமுகவும் சுவரொட்டி ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web