என்னை திமுக கூட்டணிக்கு அழைக்காது: சரத்குமார்

எங்களுடைய கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை திமுக கூட்டணிக்கு அழைக்காது என்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்ட எண்ணத்தில் ஸ்டாலின் இருப்பதால் அது சாத்தியமில்லை என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்
திருச்சி அருகே சமயபுரத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, ‘திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டார் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அவர் முதலமைச்சராக ஆகிவிட்டதாகவே அவர் தனக்கு தானே எண்ணிக் கொண்டிருக்கிறார்
அவ்வாறு இருக்கும்போது அவர் எப்படி எங்களை கூட்டணிக்கு அழைப்பார்? என்று கூறியுள்ளார். மேலும் எங்களை மட்டுமின்றி எந்த கட்சியையும் கூட்டணிக்கு அவர் அழைக்க மாட்டார் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். சரத்குமாரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிமுக கூட்டணியில் உள்ள சரத்குமார், இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் ராதிகாவும் விரைவில் முழுநேர அரசியலில் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் என்பதும், இதனால் சரத்குமாரின் கட்சி வரும் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது