திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்

திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98 கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நேற்று இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டது திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: `முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உற்ற தோழனாகவும், 43 ஆண்டுகள்
 
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்

திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98

கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நேற்று இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டது

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

`முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உற்ற தோழனாகவும், 43 ஆண்டுகள் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கழக ஆட்சியில் சமூக நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் சில நாட்கள் உடல் நலிவுற்றிருந்து இன்று 07-03-2020 அதிகாலை 1:00 மணியளவில் மறைவெய்தியதையொட்டி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் தள்ளிவைக்கப்பட்டு, கழகக் கொடிகள் ஏழு நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

From around the web