200 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம்: கூட்டணி கட்சிகளின் கதி என்ன?

 

ஒவ்வொரு முறையும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடிப்பதும் அதன் பின்னர் கூட்டணி கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் அதிக தொகுதிகளை திமுக ஒதுக்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த முறை பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட, குறிப்பாக 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் திமுக 200 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறியுள்ளார் என்பது முக ஸ்டாலின் குரலாகவே பார்க்கப்படுகிறது

stalin

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்று தெரிகிறது. அதனை அடுத்து மீதி உள்ள 34 தொகுதிகளை காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எப்படி பிரித்துக் கொடுப்பது என்ற சிக்கல் எழுந்துள்ளது 

எனவே திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு அதிகபட்சமாக 20 தொகுதிகளும் கம்யூனிஸ்டுகளுக்கு தலா ஐந்து தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக திமுக கூட்டணியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web