4ஆம் தேதி திமுக, 7ஆம் தேதி அதிமுக: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 
4ஆம் தேதி திமுக, 7ஆம் தேதி அதிமுக: அதிகாரபூர்வ அறிவிப்பு!

திமுக எம்எல்ஏ கூட்டம் மே 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அதிமுக எம்எல்ஏ கூட்டம் மே 7ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தின் தேர்தல் முடிவு நடைபெற்றதை அடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மே 4ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்திருந்தார்

இந்த நிலையில் சற்று முன்னர் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தலைமை கழகத்தில் வரும் 7-5-2021 வெள்ளிக்கிழமை மாலை நான்கு முப்பது மணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

admk

From around the web