திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி திடீர் தற்கொலை! என்ன காரணம்?

 
tamilan prasanna

திமுக பிரமுகரும், திமுகவின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான தமிழன் பிரசன்னாவின் மனைவி திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து இன்று காலை 11:30 மணி அளவில் அவர் திடீரென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கொடுங்கையூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. திமுக செய்தி தொடர்பாளரான தமிழன் பிரசன்னா தொலைக்காட்சி விவாதங்களில் காரசாரமாக உரையாற்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே

From around the web