சேப்பாக்கத்தில் உதயநிதி: திமுகவின் பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

 

திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் திமுக வேட்பாளர் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் சம்பத் குமார் என்பவரும், துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் போடி தொகுதிகள் தங்கத்தமிழ்செல்வன் அவர்களும் போட்டியிடுகிறார்கள்.

மேலும் சில முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதி குறித்து தற்போது பார்ப்போம்

கொளத்தூர்: முக ஸ்டாலின்
துரைமுருகன் - காட்பாடி 
ஐ பெரியசாமி  - ஆத்தூர் 
கேஎன் நேரு  - திருச்சி மேற்கு 
பொன்முடி  - திருக்கோவிலூர் 
எ.வ.வேலு  - திருவண்ணாமலை 
தங்கம் தென்னரசு  - திருச்சூர் 
மா.சுப்பிரமணியன் - சைதை 
செந்தில்பாலாஜி போட்டி - கரூர்  
சுப்புலட்சுமி ஜெயதீசன் - மொடக்குறிச்சி 
அனிதா ராதாகிருஷ்ணன் - திருச்செந்தூர் 

மாதாவரம்  - சுதர்சனம்
மதுரவாயல்  - கணபதி
அண்ணாநகர் - மோகன்
ஆயிரம் விளக்கு  - மருத்துவர் எழிலன்
தொண்டாமுத்தூர்  - கார்த்திகேய சிவசேனாதிபதி 
மன்னார்குடி  - டி.ஆர்.பி.ராஜா
திருவாரூர்  - பூண்டி கலைவாணன்
மணச்சநல்லூர்  - கதிரவன்
காங்கேசம்  - சாமிநாதன்
பத்மநாபபுரம்  - மனோ தங்கராஜ்
ஆலங்குளம்  - பூங்கோதை
சங்கரன்கோவில்  - ராஜா
நாகர்கோவில்  - சுரேஷ்ராஜன்

From around the web