திமுக வேட்பாளர் பட்டியல்: சில சுவாரஸ்ய தகவல்கள்!


 

 
திமுக வேட்பாளர் பட்டியல்: சில சுவாரஸ்ய தகவல்கள்!

திமுக வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த பட்டியலில் உள்ள சில சுவாரஸ்ய தகவல்களை தற்போது பார்ப்போம்.

தற்போதைய திமுக எம்எல்ஏக்கள் 78 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் 12 பெண்கள் மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா 
2. தூத்துக்குடி - பி.கீதாஜீவன் 
3.மதுரை மேற்கு - சி. சின்னம்மாள்
4.மானா மதுரை (தனி)- ஆ.தமிழரசி 
5. கிருஷ்ணராயபுரம் (தனி) - க. சிவகாமசுந்தரி 
6. தாராபுரம் (தனி) - கயல்விழி செல்வராஜ் 
7. மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி செகதீசன் 
8. ஆத்தூர்(தனி) - ஜீவா ஸ்டாலின்
9. கெங்கவல்லி - ஜெ. ரேகா பிரியதர்ஷினி 
10.திண்டி வனம் (தனி) -பி. சீத்தாபதி சொக்கலிங்கம் 
11.குடியாத்தம் (தனி) - வி. அமலு
12. செங்கல்பட்டு -வரலட்சுமி மதுசூதனன்

அதேபோல் திமுக வேட்பாளர்களில் 9 பேர் மருத்துவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெயர்கள் பின்வருமாறு:

1.புதுக்கோட்டை-Dr.முத்துராஜா
2.ஆலங்குளம் - Dr.பூங்கோதை
3.பொள்ளாட்சி - Dr.வரதராஜன்
4.இராசிபுரம் - Dr.மதிவேந்தன்
5. வீரபாண்டி- Dr.ஆ.கா.தருண்
6. விழுப்புரம்- Dr.லட்சுமணன
7.மைலம்- Dr.மாசிலாமணி
8.பாப்பிரட்டிப்பட்டி- Dr.பிரபு ராஜசேகர்
9.ஆயிரம் விளக்கு- Dr.எழிலன்

மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திமுகவில் இணைந்த 5 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர்கள் பின்வருமாறு:

லட்சுமணன், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி ,ராஜ கண்ணப்பன், மார்க்கண்டேயன் ஆகியோருக்கு வாய்ப்பு

From around the web