5 வருடத்திற்கு ஒருமுறை வரும் வாய்ப்பை கோட்டைவிட்ட தேமுதிகவின் பரிதாப நிலை!

 

ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் தேர்தலுக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த தேர்தலை தேமுதிக மிஸ் செய்து விட்டதாகவே கருதப்படுகிறது 

அதிமுக கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக அந்த கூட்டணியில் உடன்பாடு எதுவும் ஏற்படாததை அடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறியது அதன்பின் எல்கே சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர்களின் தேவையில்லாத பேச்சினால் வேறு கூட்டணியில் இணைய முடியாமல் இருந்தது 

premalatha

திமுக கூட்டணி மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணியிலும் இடம் கிடைக்காததை அடுத்து அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அமமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து தற்போது தேர்தலில் தனித்து விடப்பட்டுள்ளது

234 தொகுதிகளிலும் விஜயகாந்த் நல்ல உடல்நிலையில் இருந்த போதே போட்டியிட்டபோது ஒரு தொகுதியில் தான் ஜெயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அனைத்து தொகுதிகளில் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் குறைந்தபட்சம் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகிய நான்கு பேர்கள் எம்எல்ஏ ஆகி இருக்கவாவது வாய்ப்பு உண்டு. ஆனால் அந்த வாய்ப்பையும் இழந்து விட்ட தேமுதிகவின் எதிர்காலம் என்ன என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது

From around the web