தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவி வருகிறது என்பது தெரிந்ததே. மார்ச் 1ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட தற்போது இரு மடங்கை விட அதிகரித்து உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் சமயத்தில் அனைத்து கட்சிகளும் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருவதால் அரசியல் கட்சி பிரமுகர்களும், வேட்பாளர்களில் ஒரு சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிகவுக்கு பிரச்சாரம் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் பிரேமலதா மற்றும் எழுதிய சுதீஷ் மட்டுமே பிரச்சாரம் செய்து வந்தனர். தற்போது சுதீஷூக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பிரேமலதா மற்றும் அவருடைய மகன் விஜய பிரபாகரன் ஆகிய இருவர் மட்டுமே பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.