மாவட்டவாரியாக ஊரடங்கு: எந்தெந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகள்? தளர்வுகள்?

 
lockdown

தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்து உள்ளது என்பதும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் காய்கறி, பழங்கள், இறைச்சி ஆகியவைகளுக்கு அனுமதி உண்டு என்றும் டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், டீ கடைகள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்தது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது மாவட்ட வாரியாக ஊரடங்கு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் என்பதால் இந்த மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு

ஆனால் அதே நேரத்தில் இந்த 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள், ஹார்ட்வேர் கடைகள், புத்தக விற்பனையாளர்கள் செயல்பட அனுமதிக்கபட்டுள்ளது. மேலும் மேற்கண்ட 11 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் டாக்சிகள் இபாஸ் பெற்று பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு, குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக செல்ல இ- பாஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web