திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக துணை முதல்வர்: என்ன ஆச்சு?

 

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது 

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து மருத்துவர்கள் அவருக்கு வழக்கமான பரிசோதனை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து வீடு திரும்பியதும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

துணை முதல்வரின் உடல்நிலை நலமாக இருப்பதாகவும் அவர் வழக்கமான பரிசோதனைகளை வந்ததாகவும் அவருடைய உடலுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துணை முதல்வர் ஓபிஎஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதன் பின்னர் ஒருசில மணிநேரங்களில் டிஸ்சார்ஜ் ஆகி விட்டார் என்றும் வெளிவந்த தகவலால் பரபரப்பு அடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web