ஜூன் 15 முதல் விநியோகம்: ஜூன் 11 முதல் டோக்கன் வழங்கப்படும்!

 
ration store

தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதில் ரூபாய் 2000 ஏற்கனவே முதல் தவணையாக வழங்கப்பட்டுவிட்ட நிலையில் ஜூன் மூன்றாம் தேதி முதல் இரண்டாவது தவணை ரூபாய் 2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தற்போது இரண்டாவது தவணை ரூபாய் 2000 ஜூன் 15 முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் வினியோகம் ஜூன் 11 முதல் 14 வரை வழங்கப்படும் என்றும் ஜூன் 15 முதல் 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

ஜூன் 15 முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை நியாயவிலை கடைகளில் ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும், நியாயவிலை கடைக்கு வரும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து ரூபாய் 2000 மற்றும் மளிகை பொருட்களை பெற்றுக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web