அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் தேதி: முதல்வர் அறிவிப்பு

 

அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் தேதி குறித்த முறையான அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது 

இந்த நிலையில் தற்போது முதுநிலை இரண்டாம் ஆண்டுகளுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் இளநிலை உள்பட அனைத்து கல்லூரி மாணவர்களும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்த முறையான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்கள்

college

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளதாவது: கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும், மாணாக்கர்களுக்கான விடுதிகளும் 8.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேலும் அவர் இன்னொரு டுவீட்டில் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 31.1.2021 முடிய தமிழகம் முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் 28.2.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்

From around the web