கல்லூரி சேர்க்கைக்கான தேதி: அமைச்சர் பொன்முடி தகவல்
 

 
college

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியானது என்பதும், 600க்கு 600 மதிப்பெண்கள் யாரும் எடுக்கவில்லை என்றாலும் அனைவரும் பாஸ் என்பதால் கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் கல்லூரியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது 
 

இந்த நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவது எப்போது என்பது குறித்து தகவலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார். கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாணவர்கள் சேர்க்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார் 

அதேபோல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டுமின்றி பொறியியல் கல்லூரிகளிலும் ஜூலை 26ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க ஆன்லைனில் நடைபெறும் என்றும் மாணவர்கள் ஆன்லைன் மூலமே தாங்கள் விரும்பும் பிரிவை தேர்வு செய்து சேர்ந்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 

இன்று பிளஸ் டூ முடிவுகள் வெளியான நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் சிபிஎஸ்சி மதிப்பெண்களும் வெளியாகிவிடும் என்பது குறிப்பிடதக்கது. எனவே மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கல்லூரியில் சேர காத்திருக்கின்றனர்.

From around the web