சென்னை மெட்ரோவில் பயணம் செய்தால் ஆபத்தா? சி.ஐ.டி.யு தலைவர் பேட்டியால் பரபரப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஆபத்து என சி.ஐ.டி.யு மாநில தலைவர் சவுந்தரராஜன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில், நிர்வாகத்தின் குளறுபடிகளால் பயணிகளுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யு மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பயிற்சி இல்லாத ஓட்டுநர்களைக் கொண்டு சென்னை மெட்ரோ ரயிலை இயக்குவதால் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் “இந்தியாவில் எங்கும்
 
சென்னை மெட்ரோவில் பயணம் செய்தால் ஆபத்தா? சி.ஐ.டி.யு தலைவர் பேட்டியால் பரபரப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஆபத்து என சி.ஐ.டி.யு மாநில தலைவர் சவுந்தரராஜன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில், நிர்வாகத்தின் குளறுபடிகளால் பயணிகளுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யு மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

பயிற்சி இல்லாத ஓட்டுநர்களைக் கொண்டு சென்னை மெட்ரோ ரயிலை இயக்குவதால் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் “இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் தனக்கான தனிச்சட்டம் வகுத்துள்ளது. அந்தச் சட்டத்தை அவர்களுக்கு தகுந்தபடி எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்வதால் ஊழியர்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும். நிர்வாக மேலாண்மை இயக்குனராக பன்வாரிலால் பங்கை ஆறு ஆண்டுகளாக பணியில் நீடிப்பதால் மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பினார். பார்க்கிங் கண்ட்ரோல் ரூம் உட்பட பல ஒப்பந்தங்கள் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுகிறது“ என்றும் குற்றம் சாட்டினார்.

From around the web