ஜுன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: முதல்வர் அறிவிப்பு

 
lockdown

தமிழகத்தில் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் பின்வருமாறு:

தமிழகத்தில் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் நாமக்கல் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் ஒரு சில கட்டுப்பாடுகள் 

* சார் பதிவு அலுவலகம் ஒரு நாளைக்கு 50% டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் அனுமதிக்கப்படும்

* மீன் சந்தைகள் மொத்த விற்பனை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்
 
* எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை கடைகள்  விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் செயல்பட அனுமதிக்கப்படும் 

* இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மற்றும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்

* இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் 

* அனைத்து அரசு அலுவலர்களும் 30% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும் 

* சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் 

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும் 

*  மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

* காய்கறி, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.

From around the web