ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன கூடுதல் தளர்வுகள்!

 
lockdown

தமிழகத்தில் நாளை மறுநாள் உடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில் கூடுதலாக ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் அடுத்த வாரம் கூடுதலாக சில தளர்வுகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தற்போது மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் மதுக்கடைகள் திறக்காத மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 

அதேபோல் ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் ஒரு சில நிபந்தனைகளுடன் சிறக்க அனுமதிக்கப்படும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

மேலும் பெரிய கடைகள், மால்கள் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுவது. அதே சிறிய சிறிய வழிபாட்டுத் தளங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் இன்று ஆலோசனை முடிந்தவுடன் இன்று மாலை இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web