அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன?

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி அதாவது நாளை உடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது 
இந்த நிலையில் சற்று முன் ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31 வரை நீடிக்கபடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இதன்படி திரைப்பட படப்பிடிப்புக்கு இதுவரை 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 100 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் வரை தரை இறங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது 

மேலும் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும் என்றும், அதே நேரத்தில் உணவகங்கள், தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என்றும் உணவகங்களில் பார்சல் சேவை இரவு 10 மணிவரை நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு தடை நீடிப்பதாகவும் குறிப்பாக கடற்கரைகள், பூங்காக்கள், அருங்காட்சியகம், சுற்றுலா தளங்களுக்கு தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

அதேபோல் அரசியல் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

From around the web